கிரிக்கெட்

அறிமுக போட்டியில் அரை சதம் அடித்து சூர்ய குமார் யாதவ் அசத்தல்

அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக அரை சதம் அடித்து சூர்ய குமார் யாதவ் அசத்தியுள்ளார்.

தினத்தந்தி

ஆமதாபாத்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் (12), கே.எல். ராகுல் (14) எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கோலி (1) ரன்னில் வெளியேறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அறிமுக போட்டியில் விளையாடி வரும் சூர்ய குமார் யாதவ், அடில் ரஷீத் வீசிய பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். 28 பந்துகளில் அவர் அரை சதம் எடுத்துள்ளார். எனினும், 57 (31 பந்துகள் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள்) ரன்களில் சூர்ய குமார் யாதவ், மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

14 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு