Image Courtesy: @ZimCricketv  
கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவுக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா

நமீபியா தரப்பில் அதிகபட்சமாக ஜான் நிக்கோல் லோப்டி-ஈடன் 47 ரன்கள் எடுத்தார்.

தினத்தந்தி

புலவாயோ,

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து நமீபியா அணியின் தொடக்க வீரர்களாக ஜான் ப்ரைலிங்க் மற்றும் மாலன் க்ரூகர் களம் கண்டனர்.

இதில் ஜான் ப்ரைலிங்க் 22 ரன்னிலும், மாலன் க்ரூகர் 45 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஜான் நிக்கோல் லோப்டி-ஈடன் மற்றும் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் ஜான் நிக்கோல் லோப்டி-ஈடன் 47 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் நமீபியா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தது. நமீபியா தரப்பில் அதிகபட்சமாக ஜான் நிக்கோல் லோப்டி-ஈடன் 47 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்வ் க்ங்வாரா, பிராட் எவான்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே ஆடி வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்