Image : AFP 
கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று தேர்வுக்குழு கூடுகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று டி20 போட்டிகள், வரும் 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, சங்கர்பூர் (மேற்கு வங்காளம்), பெங்களூரில் முறையே நடக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக டி20 தொடரில் விளையாட விரும்புவதாக பிசிசிஐயிடம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியானது.

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. . 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்