கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ரோகித் கேப்டன் இல்லை... கனவு அணியை வெளியிட்ட ஆஸி. கிரிக்கெட் வாரியம்

டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் அடிப்படையில் தான் தேர்வு செய்த கனவு அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சிட்னி,

கடந்த 1-ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. ஏறத்தாழ ஒரு மாத காலமாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த வீரர்களை கொண்ட தங்களுடைய கனவு லெவன் அணியை ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக மட்டுமே தேர்வு செய்துள்ளது. மாறாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ரஷீத் கானை தங்களுடைய கனவு அணியின் தலைவராக நியமித்துள்ளது.

அந்த அணியில் இந்திய வீரர்களான ரோகித், ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா தேர்வு செய்த கனவு அணி விவரம் பின்வருமாறு:-

ரஷீத் கான் (கேப்டன்), ரோகித் சர்மா, டிராவிஸ் ஹெட், நிக்கோலஸ் பூரன், ஆரோன் ஜோன்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாத் ஹொசைன், ஆன்ரிச் நோர்ஜே, பும்ரா மற்றும் பரூக்கி.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு