கிரிக்கெட்

அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம்: ராகுல் டிராவிட்

அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம் என இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டியளித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை டெஸ்டில் வாகை சூடிய பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இளம் வீரர்கள் நன்றாக ஆடுவதை பார்க்கும் போது இனி அணி வீரர்கள் தேர்வில் எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது. இதனால் நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம். ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கும் போது ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்ற தெளிவான தகவல் பரிமாற்றம் எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம் என்றார்.

இதன் மூலம் மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரது இடத்துக்கு ஆபத்து வந்துள்ளதை டிராவிட் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்