கிரிக்கெட்

இது போன்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - விராட் கோலி

எந்த சூழ்நிலையிலும் போட்டியை எங்கள் பக்கம் திரும்பலாம் என்ற நம்பிக்கையை இது போன்ற வெற்றி அளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஸ்ரீகர் பரத் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெங்களூரு வெற்றிக்கு வழிவகுத்தார். பரத் 78 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், நம்பமுடியாத விளையாட்டு. எங்களுக்கு இழக்க எதுவும் இல்லை. இது மிகவும் போட்டி நிறைந்த விளையாட்டு. ஐபிஎல் என்றாலே அதுதான். எந்த சூழ்நிலையிலும் போட்டியை எங்கள் பக்கம் திருப்பலாம் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி எங்களுக்கு அளிக்கிறது என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்