கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

கார்டிப்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 21-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 48 ஒவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 35(25) ரன்களும், நூர் அலி சாட்ரன் 32(58) ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளும், ஆண்ட்லி 2 விக்கெட்டுகளும், ரபடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ஹசிம் அம்லா, குயிண்டன் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறந்த துவக்கத்தை தந்த ஜோடியில் டி காக் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 68(72) ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திவந்த ஹசிம் அம்லா 41(83) ரன்களும், பிகுலுவோயோ 17(17) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 28.4 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் குல்பதின் நைப் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றிபெற்றது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்