போர்ச்சுக்கல்,
நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும் ரொனால்டோவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்றும், அவர் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் ரொனால்டோ தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்வீடனுக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டிக்கான போர்ச்சுகல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டார்.