Photo Credit: AFP 
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து; இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கால்பந்து போட்டி தொடரில் டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தினத்தந்தி

பாகு,

16-வது ஐரோப்பிய கால்பந்து தொடர் (யூரோ) இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. பாகு நகரில் நேற்று நடந்த 3-வது காலிறுதியில் டென்மார்க்- செக் குடியரசு அணிகள் சந்தித்தன. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி டென்மார்க் அரையிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது. உக்ரைன் அணியினரால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்