Image Courtesy: @ChennaiyinFC  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் நைஜீரியா வீரர்

சென்னையின் எப்.சி. அணியில் நைஜீரியாவை சேர்ந்த டேனியல் சிமா சுக்வு 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிக்கு நைஜீரியாவை சேர்ந்த டேனியல் சிமா சுக்வு 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்கள வீரரான 32 வயதான டேனியல் சிமா 2024-25-ம் ஆண்டு சீசனுக்காக சென்னை அணியில் இணையும் 4-வது வீரர் ஆவார். முன்னதாக அவர் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிக்காக விளையாடி வந்தார்.

அவர் ஐ.எஸ்.எல். தொடரில் இதுவரை 60 ஆட்டங்களில் ஆடி 20 கோல் அடித்திருப்பதுடன், 4 கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்