Image Courtesy: @RGPunjabFC / @GokulamKeralaFC  
கால்பந்து

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து: பஞ்சாப் - கோகுலம் கேரளா ஆட்டம் டிரா

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது

தினத்தந்தி

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் எப்.சி - கோகுலம் கேரளா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தன.

ஆனால் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என டிராவில் முடிந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்