ஹாக்கி

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி அயர்லாந்தை எளிதில் தோற்கடித்தது.

தினத்தந்தி

சான்டியாகோ,

24 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று அயர்லாந்துடன் மோதியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது (62 சதவீதம்), அதிகமான ஷாட்டுகள் அடிப்பது என எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை எளிதில் தோற்கடித்தது. கனிகா சிவாச், பூர்ணிமா யாதவ் (2), சாக்ஷி ராணா ஆகியோர் கோலடித்தனர்.

3-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் நமிபியாவை வீழ்த்திய இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் இந்தியா அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்