விளையாட்டு

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி; சாய்னா தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால் 22-20, 15-21, 10-21 என்ற செட் கணக்கில் போராடி போர்பவீ சோச்சுவாங்கிடம் (தாய்லாந்து) வீழ்ந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அயா ஓஹோரியை (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-18, 21-16 என்ற நேர் செட்டில் மாவ்லனா முஸ்தோபாவை (இந்தோனேஷியா) விரட்டியடித்தார். அதே சமயம் இந்தியாவின் பிரனாய் 21-12, 16-21, 14-21 என்ற செட் கணக்கில் சித்திகோம் தமாசினிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை