பிற விளையாட்டு

உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்

விஜயவாடாவை சேர்ந்த 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

அண்டால்யா,

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்-சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

உலகக் கோப்பை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு பாரீசில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அபிஷேக் வர்மாவுடன் இணைந்து இதே பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 149-146 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சாரா லோபெஸ்சை (கொலம்பியா) வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

அத்துடன் 2021-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சாராலேபெஸ்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். விஜயவாடாவை சேர்ந்த 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி