பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு; முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வாலிபால் அணி..!!

இந்தியா- கம்போடியா இடையிலான வாலிபால் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23ம் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.

இன்று நடைபெற்ற வாலிபால் போட்டி ஒன்றில் இந்தியா-கம்போடியா அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடிய இந்திய அணி முதல் 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-14, 25-13 மற்றும் 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்து வைத்துள்ளது. 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை