பிற விளையாட்டு

ஆசிய டேபிள் டென்னிஸ்: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஜோடி

இந்தியாவின் அஹிகா முகர்ஜி- சுதிர்தா முகர்ஜி ஜோடி , ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டது.

தினத்தந்தி

அஸ்தானா,

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஹிகா முகர்ஜி- சுதிர்தா முகர்ஜி ஜோடி , ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ - மியு கிஹாரா ஜோடியை எதிர்கொண்டது.

இதில் 11-4, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் ஜப்பான் ஜோடி வெற்றி பெற்றது . அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அஹிகா முகர்ஜி- சுதிர்தா முகர்ஜி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது . 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு