கோல்டு கோஸ்ட்,
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற, 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன் தங்க பதக்கம் வென்றார். இதன் மூலம், பதக்க பட்டியலில் இந்தியா 25 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.