விஜ்க் ஆன் ஜீ,
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 9வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன் குகேஷ், ஜெர்மனியின் மத்யாஸ் புளூபாமை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 37-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். அவர் நடப்பு தொடரில் சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
9-வது சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஜவோகிர் சிந்தாராவ், யாஜிஸ் கான் எர்டோக்மஸ் (துருக்கி), ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) தலா 5½ புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.