பிற விளையாட்டு

ஆசிய பெண்கள் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்

ஆசிய பெண்கள் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தினை உறுதி செய்துள்ளார் மேரி கோம்.

தினத்தந்தி

இதில் இந்தியாவை சேர்ந்த குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடை பிரிவில் கால் இறுதி போட்டியில் சீனதைபேயை சேர்ந்த மெங்-சீய்ஹ் பின் உடன் விளையாடினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார் 34 வயது நிறைந்த கோம். இவர் அரையிறுதியில் ஜப்பானின் டிசுபாசா கொமுராவை சந்திக்கிறார்.

இந்த போட்டியில் இதற்கு முன் 4 முறை தங்கம், ஒரு வெள்ளி என 5 போட்டிகளில் மேரி கோம் பதக்கங்களை வென்றுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்