பிற விளையாட்டு

கொலை வழக்கு : மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதை தொடர்ந்து சுஷில் குமார் ஜூன் 2ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

டெல்லி

2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் இந்தியாவின் சுஷில் குமார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை இந்த ஆண்டு மே மாதம் சொத்து தகராறு காரணமாக சத்ரசல் மைதானத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதை தொடர்ந்து சுஷில் குமார் ஜூன் 2ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கூறி சுஷில் குமார் தரப்பில் டெல்லி ரோகிணி கோர்ட்டில் நேற்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

கொலையான சாகர் தங்கர் சார்பில் வழக்கறிஞர் நிதின் வசிஷ் வாதாடினார்.

சுஷில் குமார் ஜாமீனில் விடுவிக்கப்படக் கூடாது என வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு