பிற விளையாட்டு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டியில் திருவள்ளூர் அணி வெற்றி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில் பள்ளி அணிகளுக்கான ஆண்கள் பிரிவின் ஆட்டம் ஒன்றில் திருவாரூர் மாவட்டம் 74-47 என்ற புள்ளி கணக்கில் திண்டுக்கல்லை தோற்கடித்தது.

மற்ற ஆட்டங்களில் தூத்துக்குடி அணி 65-15 என்ற புள்ளி கணக்கில் அரியலூரையும், சேலம் அணி 79-44 என்ற புள்ளி கணக்கில் செங்கல்பட்டுவையும், தேனி அணி 74-49 என்ற புள்ளி கணக்கில் கடலூரையும், திருவள்ளூர் அணி 70-35 என்ற புள்ளி கணக்கில் மயிலாடுதுறையையும் வென்றன.

இதன் பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்ட அணி 41-4 என்ற புள்ளி கணக்கில் கிருஷ்ணகிரியையும், சென்னை அணி 32-7 என்ற புள்ளி கணக்கில் புதுக்கோட்டையும், திண்டுக்கல் 58-55 என்ற புள்ளி கணக்கில் கடலூரையும், தஞ்சாவூர் அணி 51-36 என்ற புள்ளி கணக்கில் செங்கல்பட்டுவையும் தோற்கடித்தன.

25-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த போட்டியில் நேற்றைய ஆட்டங்கள் முடிவில் பதக்க பட்டியலில் சென்னை மாவட்டம் 12 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலத்துடன் முதலிடத்திலும், திருவள்ளூர் 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், திருச்சி 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்