பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: சீன தைபே, தென்கொரியா வீரர்களை வீழ்த்திய அடானு தாஸ்

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் சீன தைபே மற்றும் தென்கொரியா வீரர்களை வீழ்த்தி அடானு தாஸ் முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டி நடந்தது.

இதில் இந்திய வீரர் அடானு தாஸ் சீன தைபேவின் டெங் யூ-செங் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த போட்டியில், தென்கொரியாவின் ஓ ஜின்-ஹையெக் என்பவரை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவரான ஹையெக்கை வீழ்த்தி 8 பேர் கொண்ட அடுத்த சுற்று போட்டிக்கு அடானு தாஸ் முன்னேறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்