பிற விளையாட்டு

பெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி - இந்திய அணி தங்கம் வென்றது

இந்திய ‘வீராங்கனைகள் அனுபமா ராமச்சந்திரன்- அமீ கமானி ஜோடி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.

சென்னை,

பெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி வீராங்கனைகள் அனுபமா ராமச்சந்திரன்- அமீ கமானி ஜோடி 4-3 என்ற பிரேம் கணக்கில் இங்கிலாந்தின் ரியான்னே இவான்ஸ்- ரெபக்கா கென்னா இணைக்கு அதிர்ச்சி அளித்து, தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதில் அனுபமா தமிழகத்தை சேர்ந்தவர். சென்னையில் உள்ள சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அமீ கமானி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். அவர்கள் கூறும் போது 'வெற்றி பெற்று தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.

"It feels like magic!" - full reaction from India's @KamaniAmee and Anupama Ramachandran following their landmark victory at the Women's Snooker World Cup this evening!

: https://t.co/o7hFdHBprH#WomensSnooker pic.twitter.com/b2sSb2LZQY

World Women's Snooker (@WomensSnooker) February 27, 2023 ">Also Read:

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை