பிற விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை போட்டி; தங்க பதக்கம் வென்ற இந்திய அணி

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ரிகர்வ் கலப்பு அணி தங்க பதக்கம் வென்று உள்ளது.

தினத்தந்தி

அன்தல்யா,

துருக்கி நாட்டின் அன்தல்யா நகரில் நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ரிகர்வ் கலப்பு குழு போட்டி ஒன்றில் இந்தியாவின் ரிதி (வயது 17) மற்றும் தருண்தீப் ராய் (38 வயது) ஆகியோர் விளையாடினர்.

இங்கிலாந்தின் பிரையனி பிட்மேன் மற்றும் அலெக்ஸ் வைஸ் ஆகியோருக்கு எதிரான இந்த போட்டியில், 2-0 என்ற செட் கணக்கில் பின் தங்கி இருந்த இந்திய அணியினர் பின்னர் மீண்டு வந்து போட்டியை சமன் செய்தனர்.

எனினும் 3வது செட்டில், 39-40 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால், 4வது செட்டை 38-37 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி கைப்பற்றி ஷூட்-ஆப் முறையில் வெற்றி பெறுவது முடிவு செய்யப்பட்டது. இதில், 18-17 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்