பிற விளையாட்டு

உலக கோப்பை குத்துச்சண்டை: 9 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம்

10 நாடுள் பங்கேற்ற உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்தது.

புதுடெல்லி,

கடைசி நாளில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ உடல்எடை பிரிவு) 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் மாயா கிளைன்ஹான்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மனிஷ் (57 கிலோ பிரிவு) 3-2 என்ற கணக்கில் சக நாட்டவர் சாக்ஷியை வென்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். முந்தைய நாளில் இந்திய வீரர் அமித் பன்ஹாலுக்கு (52 கிலோ) தங்கப்பதக்கம் கிட்டியது. மூன்று நாட்கள் நடந்த இந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 9 பதக்கத்துடன் 2-வது இடத்தை பெற்றது. ஜெர்மனி அணி 16 பதக்கங்களுடன் (4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்) முதலிடத்தை பிடித்தது. உலக குத்துச்சண்டையில் சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ பாராட்டியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை