சென்னை,
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நலவாழ்வு சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய விளையாட்டு போட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான அமர்ந்து விளையாடும் கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 25-20 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நின்றபடி விளையாடும் கபடி இறுதிப்போட்டியில் தமிழக அணி 20-14 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பரிசளிப்பு விழாவில் ஜெயா கல்வி குழும சேர்மன் கனகராஜ், வேல்ஸ் கல்வி குழும இயக்குனர் (விளையாட்டு) அபிலாஷ் ரத்னாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நலவாழ்வு சங்க தலைவர் வரதகுட்டி, பொதுச்செயலாளர் ஆவின் கோபிநாத் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்