டென்னிஸ்

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் :சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் அனெட் கொன்டாவீட்

இந்த வருடத்தில் மட்டும் அனெட் கொன்டாவீட் வெல்லும் 4 வது டென்னிஸ் பட்டம் இதுவாகும்

தினத்தந்தி

ரோமானியா

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவீட்.

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடர் ரோமானியாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலெப் எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவீட் பலப்பரீட்சை நடத்தினர்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனெட் கொன்டாவீட் சிமோனா ஹாலெபிற்கு கடும் சவால் அளித்தார். தொடர் முழுவதும் மிக சிறப்பாக விளையாடிய அனெட் இறுதி போட்டியிலும் 6-2 6-3 என்ற நேர் செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இந்த வருடத்தில் மட்டும் அனெட் கொன்டாவீட் வெல்லும் 4 வது டென்னிஸ் பட்டம் இதுவாகும்.மேலும் அனெட் தான் கடைசியாக விளையாடிய 28 போட்டிகளில் 26 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு