டென்னிஸ்

ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி

மணிலா,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்

விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, தாய்லாந்தின் அபிலுக் காடெரா ஹாங்-நாட்சனோன் துலாமோக் இணையை எதிர்கொண்டது.

27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்த ஆட்டத்தில் சாத்விக் -சிராக் ஷெட்டி ஜோடி ஜப்பானின் அகிரோ கோகா- தாய்சி சாய்டோ இணையை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத்-விஷ்ணுவர்தன் கவுட் பன்ஜலா ஜோடி 10-21, 21-19, 16-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் காங் மின்யுக்- கிம் வோன்ஹோ இணையிடம் தோல்வி அடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் இஷான் பத்நா கர்-தனிஷா கிரஸ்டோ இணை 21-15, 21-17 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் லா செக்-யுங் நா டிங் ஜோடியை தோற்க டித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்