image tweeted by #AustralianOpen 
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் பாவ்டிஸ்டாவிடம் ஆண்டி முர்ரே தோல்வி

முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பாவ்டிஸ்டா 6-1, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு