Image Courtesy: Twitter  
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்...!

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது

தினத்தந்தி

மாண்ட்ரியல்,

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறலாம் என்ற முனைப்புடன் இரு ஜோடியும் களத்தில் இறங்கின. முடிவில் போபண்ணா இணை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இன்று இரவு நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் போபண்ணா இணை மார்செல் கிரானோல்லர்ஸ் - ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்