பாரிஸ்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான காலிறுதி போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச்சும் ஆஸ்திரேலியாவின் டோம்னிக் தீமும் மோதினர்.
7 ஆம் நிலை வீரரான டோம்னிக் தீம், ஜோகோவிச்சுக்கு கடும் சவால் அளித்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6,6-3,6-0 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை டோம்னிக் தீம் தோற்கடித்தார். இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியனான ஜோகோவிச் நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார். டோம்னிக் தீம் அரையிறுதியில் ரஃபேல் நடாலை சந்திக்க உள்ளார்.