Image: Sai Media 
டென்னிஸ்

மான்டி கார்லோ டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி

இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, மேட் பவிச் (குரோஷியா)- மார்செலோ அரேவலோ (எல்வடார்) இணையை சந்தித்தது

தினத்தந்தி

மான்டி கார்லோ,

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, மேட் பவிச் (குரோஷியா)- மார்செலோ அரேவலோ (எல்வடார்) இணையை சந்தித்தது. இதில் போபண்ணா கூட்டணி 3-6, 6-7 (6-8) என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.

ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சினெர் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் செபாஸ்டியன் கோர்டாவை (அமெரிக்கா) எளிதில் தோற்கடித்தார். டேனில் மெட்விடேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஹர்காக்ஸ் (போலந்து) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்