டென்னிஸ்

தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ்: மராட்டிய அணி மீண்டும் 'சாம்பியன்'

84-வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

84-வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி (17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலையில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அணிகளுக்கான அரைஇறுதி ஆட்டங்களில் மராட்டியம் 3-2 என்ற கணக்கில் கர்நாடகாவையும், அரியானா 3-1 என்ற கணக்கில் மேற்கு வங்காளத்தையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இரவில் நடந்த இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-அரியானா அணிகள் மல்லுக்கட்டின. விறுவிறுப்பான இந்த மோதலில் மராட்டிய அணி 3-1 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

மராட்டிய அணியில் தனிஷா இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும், சயாலி வாணி மற்றொரு ஆட்டத்திலும் வெற்றியை தேடித்தந்தனர். அரியானா அணியில் சுஹானா சைனி 11-9, 11-2, 11-6 என்ற நேர் செட்டில் ஜெனிபர் வர்கீசை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு