டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சீன முன்னணி வீராங்கனை விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதில் இருந்து சீன முன்னணி வீராங்கனை விலகியுள்ளார்.

தினத்தந்தி

பீஜிங்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் நடக்கிறது. ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் அரங்கேறும் இந்த போட்டியில் இருந்து சீனாவின் நம்பர் ஒன் வீராங்கனை வாங் குவாங் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறை சின்சினாட்டி மற்றும் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்துள்ள அவர் அடுத்த சீசனில் இந்த போட்டியில் விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். 28 வயதான வாங் குவாங் உலக தரவரிசையில் 29-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்