image courtesy: AFP 
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனை 2-வது சுற்றுக்கு தகுதி

நவோமி ஒசாகா தனது 2-வது சுற்று ஆட்டத்தில் கரோலினா முச்சோவா உடன் மோத உள்ளார்.

தினத்தந்தி

நியூயார்க்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் கரோலினா முச்சோவா உடன் மோத உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்