Image Courtesy: AFP  
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்...!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எம்டன் இணை அமெரிக்காவின் நதானியேல் லாம்மன்ஸ் - ஜாக்சன் வித்ரோ இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 என போராடி கைப்பற்றிய போபண்ணா இணை அடுத்த செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி அசத்தியது. இறுதியில் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் போபண்ணா இணை நதானியேல் லாம்மன்ஸ் - ஜாக்சன் வித்ரோ இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

போபண்ணா இணை அரையிறுதி ஆட்டத்தில் பிரான்சின் நிக்கோலஸ் மஹத் - பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட் இணையை எதிர்கொள்ள உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு