லண்டன்,
டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளன. இதற்காக வீரர், வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் விலகி உள்ளார். கடந்த மே மாதத்தில் நடந்த மற்றொரு கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிசில் 2வது சுற்று போட்டியில் காயத்தினால் ஹாலெப் விலகினார்.
இதனை தொடர்ந்து அவரால், விம்பிள்டன் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. காயத்தில் இருந்து முழுவதும் மீளாத சூழலில், போட்டியில் இருந்து வாபஸ் பெறுகிறேன் என வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவு போட்டியில் இருந்து விலகும் முடிவை டோமினிக் தீம் நேற்று வெளியிட்டார். அவரும் வலது மணிக்கட்டு காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார்.