விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி நிதான ஆட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. 10 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடக்கும் முதல் டெஸ்ட் இதுவாகும். டாஸ் ஜெயித்து முதலில் நிதானமாக பேட்டிங் செய்த இலங்கை அணி 68.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் கருணாரத்னே 59 ரன்களும், ஒஷாடா பெர்னாண்டோ 40 ரன்களும் எடுத்தனர். இன்றைய 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை