இப்போது நடிகராகிவிட்ட லிவிங்ஸ்டன், 40 வருடங்களுக்கு முன்பு சில டைரக்டர்களின் கதை விவாத குழுவில் இருந்தவர். 1988-ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன்தான் இவர் நடித்த முதல் படம். சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து இருக்கிறார். மேலும் சில படங்களில் குணச்சித்ர நடிகராக வந்து போய் இருக்கிறார்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த இவர், தற்போது கிழக்கு கடற்கரை சாலைக்கு குடிபெயர்ந்து விட்டார். லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.