புதுச்சேரி

டீ மாஸ்டரை தாக்கியவர் கைது

கோட்டுச்சேரி அரகே டீ மாஸ்டரை தாக்கியவர் பொலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

காரைக்கால் காஜியார் தெரு மீராப்பள்ளி தோட்டத்தை சேர்ந்தவர் நைனாமுகமது (வயது 62). டீ மாஸ்டராக வேலை செய்கிறார். இவர் நேற்று  மதிய உணவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றார். அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர், சாப்பிட்டு கொண்டிருந்த நைனாமுகமதுவிடம் தகராறு செய்து, கருங்கற்களால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நைனாமுகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நைனாமுகமதுவை தாக்கிய சீர்காழியை சேர்ந்த சிவகுமார் என்பவரை கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்