சினிமா துளிகள்

ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்

உலகமெங்கும் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கும் வலிமை திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து படக்குழுவினர் பார்த்து இருக்கிறார்கள்.

தினத்தந்தி

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள்.

இந்நிலையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள். இவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்