சினிமா துளிகள்

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

பல வெற்றி படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் அர்ஜுன். இவருடன் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், புதிய கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தீயவர் குலைகள் நடுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் கவனம் பெற்று வருகிறது. ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரத் ஆசீவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை