புதுச்சேரி

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு ஊழியர்களை நியமிக்க முடிவு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,

தினத்தந்தி

புதுச்சேரி

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவையில் சிறப்பு திருத்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியில் புதுவை மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்து துறைகளுக்கும் குறிப்பாணை அனுப்பி உள்ளார். அந்த குறிப்பாணையில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை 1-1-2024-ஐ தகுதிபெறும் நாளாக கொண்டு மேற்கொள்ள உள்ளது. இதற்காக அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் இதர களப்பணியாளர்கள் அனைத்து துறைகள், அலுவலகங்களில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர். எனவே இந்த திருத்தப்பணி வெற்றிகரமாக நடைபெற அனைத்து துறை தலைவர்கள் தங்கள் துறை அதிகாரிகள், ஊழியர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்