சினிமா துளிகள்

எளிய மக்களுக்கான அரசியலை பேசும் படம் ‘வாய்தா’

``புதுமுக நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ‘வாய்தா’, எளிய மக்களுக்கான அரசியலை பேசும் படம்” என்று, அந்த படத்தின் டைரக்டர் மகிவர்மன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இந்தப் படம் முதலில், ஏகாலீ என்ற பெயரில் தயாராகி வந்தது. படத்தின் கதையை தயாரிப்பாளர் வினோத்குமாரிடம் சொன்னவுடன் தயாரிக்க சம்மதித்தார். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, படைப்பு சுதந்திரத்தை வழங்கினார்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ஏகாலீ என்ற தலைப்பை மாற்றும்படி அறிவுறுத்தினார்கள். இதுபற்றி தயாரிப்பாளருடன் விவாதித்து படத்தின் பெயரை, வாய்தா என்று மாற்றினோம். இது, மக்களுக்கான படைப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக பவுலின் ஜெசிகா என்ற புதுகதாநாயகி நடிக்கிறார்.

பேராசிரியர் மு.ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை