சினிமா துளிகள்

மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்கவில்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் அடுத்த நடிக்கவுள்ள படம் குறித்து வெளியான தகவலை விக்ரம் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினத்தந்தி

நடிகர் விக்ரமின் 60-வது படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்து நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள 28வது படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இப்படத்தில் விக்ரம் வில்லன் கதாப்பாத்திரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் விக்ரம் தரப்பிலிருந்து இந்த தகவல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் வதந்தியே. இது ஒரு உறுதி செய்யப்படாத தகவல். பத்திரிகைகள் தயவு செய்து இது போன்ற செய்திகளை வெளியிடும் போது எங்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடவும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்