

மேஷ ராசி அன்பர்களே!
தான் கோபப்பட்டால் தனக்குத் தான் நஷ்டம் என்பதை அறிந்து நடப்பவர் நீங்கள். பொறுமையை கையாண்டு நினைத்த இலக்கை அடைபவர்.
சிறப்புப்பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்கள் பாலினரிடையே கவனமுடன் பழகுவது நல்லது. அளவாக பேசுவது பிரச்சினைகளை தவிர்க்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வங்கியில் கடன் வசதி கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு அதிக முதலும் அதிக வேலையாட்களை வைத்து கொண்டு தங்களது தொழிலை விரிவுபடுத்துவர். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இரண்டு வகையான துறைகளில் இருந்து லாபம் கிகும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு வெளியே தேவையான பொருட்களை கணவர் வாங்கித் தந்து மகிழ்விப்பார். தங்கள் கணவர் தங்களை புரிந்து கொள்வார். கணவர் வீட்டு உறவினர் வந்து போவர்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் தங்களுக்கு தெரிந்த நபர் உங்களுக்கு சிபாரிசு செய்வர். கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாரே குறித்த நேரத்தில் படபிடிப்பு ஆரம்பிக்கப்படும்.
மாணவர்களுக்கு
மாணவ மாணவியருக்கு ஆசிரியரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
பரிகாரம்
சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று எள்தீபம் ஏற்றுவது மிக சிறந்தது.
ரிஷப ராசி அன்பர்களே!
யார் யாரை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்தவர் நீங்கள். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதனை உண்ர்ந்தவர்
சிறப்புப்பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மனநிறைம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக பெண் ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அதிக லாபத்தினை பெறுவர். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்துவீர்கள்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினை அகலும். கணவருடைய பேச்சு அர்த்தமுள்ளதாக உணர்வீர்கள். பிள்ளைகளின் ஆதரவு பெருகும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும், ஒரே நேரத்தில் பல படங்கள் புக்காகும். புகழ் கிடைக்கும். மக்களின் ஆதரவை பெறுவர்.
மாணவர்களுக்கு
மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து தானாகவே மற்றவரின் தூண்டுதல் இன்றி படிக்கத் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் உட்கொள்ள வேண்டாம்.
வழிபாடு
லக்சுமி நரசிம்மரை வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவது நல்லது.
மிதுன ராசி அன்பர்களே!
எவருடைய சிபாரிசும் இன்றி தங்கள் தனித்திறமையால் முன்னேறிக் கொண்டடிருப்பவர் நீங்கள். எந்த பிரச்சினை வந்தாலும் நேருக்கு நேர் நின்று சமாளிப்பவர்.
சிறப்புப்பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். தங்கள் சொந்த ஊருக்கே இடமாற்றம் செய்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்திலேயே வேறு இடத்தில் இடமாற்றம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் இருக்கும், அது நல்ல ஆதாயத்தைத் தரும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் தையல் கலையில் ஈடுபடுபவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் வீட்டில் கலைகட்டும். கணவர் வழி உறவினர்களால் வந்த தொல்லைகள் இனி அகலும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் பிரபலமாவர். பாராட்டுகள் குவியும். கலைஞர்களுக்கு படத்திற்கான முன் பணம் கிடைக்கும். தாங்கள் எதிர்பார்த்த வண்ணம் நல்ல சம்பளம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு
மாணவ, மாணவிகளுக்கு வகுப்பில் அமைதி காப்பது மிக நன்று. நன்கு படித்திருப்பது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும்.
பரிகாரம்
புதன்கிழமை அன்று சீனிவாச பெருமாளை தரிசித்து துளசி மாலையை சாத்துவது நல்லது.
கடக ராசி அன்பர்களே!
எந்த விசயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையை கடைபிடிப்பவர் நீங்கள். கோபத்தை குறைத்து விவேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
சிறப்புப்பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் இனி தவறினை உணர்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கடனுதவி செய்வர்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த சொந்த ஊரிலிருந்து ஆட்களை வரவழைத்து முழு நேர வேலைகளை செய்து உற்பத்தியினை உயர்த்துவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்ப தலைவிகளுக்கு நீண்ட காலமாக சம்பந்திகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். சகோதர சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு செல்வாக்கு கூடும். அரசு அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். அவர்களால் பல விதத்திலும் தங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தேகம் பளிச்சிடும்.
மாணவர்களுக்கு
மாணவ மணிகளுக்கு கல்வி கற்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள் தங்களுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருவர். உடல் உஷ்ணமாகும். இளநீர் நீராகாரம் போன்றவைகளை உட்கொள்வது நல்லது.
பரிகாரம்
முத்துமாரி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல் படைப்பது நல்லது.