தங்கம் விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற-இறக்கத்துடன் நீடித்த நிலையில், நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 820-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் குறைந்திருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,050-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

06.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,400 (இன்று)

05.05.2026 ஒரு சவரன் ரூ.1,10,560 (நேற்று)

04.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000

03.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000

02.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000

01.05.2026 ஒரு சவரன் ரூ.1,11,360

X

Daily Thanthi
www.dailythanthi.com