தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை கடந்த 29-ம் தேதி சற்று அதிகரித்தது.

தொடர்ந்து கடந்த 30-ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,630-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், தங்கம் விலை நேற்று (01.06.2026) அதிரடியாக குறைந்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலையில் இன்று (02.06.2026) மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

02.06.2026 - ஒரு சவரன் - ரூ. 1,16,000 (இன்று)

01.06.2026 - ஒரு சவரன் - ரூ. 1,16,000 (நேற்று)

31.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,17,040

30.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,17,040

29.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,800

28.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

X

Daily Thanthi
www.dailythanthi.com