குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

அட்சய திருதியையொட்டி தமிழகத்தில் நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருந்தது. நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த சூழலில் தங்கத்தின் விலை சில தினங்களாக குறைந்து வருகிறது.

நேற்று தங்கம் விலை தங்கம் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் குறைந்து ஒரு கிராம் ரூ. 14,160-க்கும், சவரன் ரூ.1,13,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,100-க்கும், சவரன் ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

24.04.2026 ஒரு சவரன் - ரூ.1,12,800 (இன்று)

23.04.2026 ஒரு சவரன் - ரூ.1,13,280 (நேற்று)

22.04.2026 ஒரு சவரன் - ரூ.1,14,000

21.04.2026 ஒரு சவரன் - ரூ.1,14,400

20.04.2026 ஒரு சவரன் - ரூ.1,14,400

19.04.2026 ஒரு சவரன் - ரூ.1,14,880

X

Daily Thanthi
www.dailythanthi.com