அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 29-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 ஆக அதிகரித்திருந்தது. அதன்பின் விலை இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தது.

கடந்த ஓரிரு நாட்களாக விலை குறைந்திருந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று முன் தினம் மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 270-க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 560 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160 ஆக உயர்ந்தது.

நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்பட்டது.

Also Read
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தால் விற்பனை மந்தம்: நகை உற்பத்தி பாதிப்பால் முடங்கிய பட்டறைகள்
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

இன்றைய தங்கம் விலை

இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தகம் விலை பவுனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ரூ.14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com